பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்57

New Page 1

மந்திரத்திலும் தமிழர்களுக்கு நம்பிக்கையிருந்தது.

‘‘மாநிலம் கூறும் மறைகேட்ப போன்றவே-பூமிதேவி கூறுகின்ற மந்திரத்தைக் கேட்பது    போல இருக்கிறது’’                     (பா.41)

மேலே காட்டியவைகள் தமிழர்களின் பழைய நம்பிக்கைகளையும், பழக்க
வழக்கங்களையும் காட்டுகின்றன. இவ்வாசிரியர் கூறும் உவமானங்கள் மிகவும்
அழகாகவும்,பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன. இந்நூலைப்
படிப்போர் இவற்றின் அருமைகளை அறியலாம்.