9. முதுமொழிக்காஞ்சி
நூல் வரலாறு
முதுமொழிக்காஞ்சி: அறிவு நிறைந்த மொழியாகிய காஞ்சி. முதுமொழி-
பழமொழி
என்றும் கூறுவர்.
என்பது
காஞ்சியின் ஒரு பகுதி. அறம் பொருள் இன்பங்களை
அறிவுறுத்துதல் முதுமொழிக்
காஞ்சியாகும்.
இந்நூலின் செய்யுட்கள் வெண்செந்துறை என்னும் ஒருவகைச் செய்யுள்
இரண்டடிகள்
கொண்டது;
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்
அமைந்திருப்பது. இதுவே
வெண்செந்துறை.
இந்நூலின் ஒவ்வொரு செய்யுளின் முதல் அடி ‘‘ஆர்கலி உலகத்து
மக்கட்கெல்லாம்’’
என்பது. 1. சிறந்த பத்து 2. அறிவுப்பத்து
3.பழியாப்பத்து. 4.
துவ்வாப்பத்து 5. அல்லபத்து 6. இல்லைப்பத்து
7.பொய்ப்பத்து 8.எளியபத்து 9.
நல்கூர்ந்தபத்து 10. தண்டாப்பத்து,
என்னும்
பத்துப் பிரிவுகளை யுடையது. ஒவ்வொரு
பகுதியிலும் பத்துப் பத்துப்
பாடல்கள். நீதி நூல்களிலே
மிகவும் சிறியதொரு நூல். மற்றைய
நீதி நூல்களை நோக்க இது அவ்வளவு சிறப்புடையதன்று.
பண்டைக்
காலத்திலே
தமிழர்கள் சிறந்த ஒழுக்கமுள்ளவர் களாயிருந்தனர்; வாழ வழியறிந்திருந்தனர்;
பல
உண்மைகளைத் தெரிந்துகொண்டிருந்தனர்;
என்பதை விளக்க இந்நூலும் துணை
செய்கின்றது.
|