பக்கம் எண் :

60சாமி சிதம்பரனார்

New Page 1

உயர்வு தாழ்வு வேற்றுமைகள் ஒழிந்து போகும். கல்வியினால் உலக மக்கள்
ஒன்றுபட்டு வாழ முடியும் என்பதே முன்னோர் கொள்கை.

தேசங்கள் தோறும் ஆசாரங்கள் வேறுபட்டிருக்கும். ஒரு நாட்டினரின்
ஆசாரத்தை மற்றொரு நாட்டினர் பழிப்பது தவறு. பழிப்பதனால் ஒரு
நாட்டினர்க்கும் மற்றொரு நாட்டினர்க்கும் உள்ள உறவு கெட்டுப் போகும்.

        ‘‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
         அறியாத் தேசத்து ஆசாரம் பழியார் (3-ஆம் பத்து. பா.8)

உலகத்து மக்களுக்கு வேண்டிய சிறந்த குணம், தாம் அறியாத நாட்டின்
ஆசாரத்தைப பழிக்காமல் இருப்பதாகும்’’

மறு பிறப்பிலே தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். வயது
முதிர்வதன் பலன், மறுபிறப்பு உண்டென்பதை அறிவது. மறுமையில் இன்பம் பெறும் வகையிலே அறத்தையும், ஒழுக்கத்தையும் பின்பற்றி நடப்பதே சிறந்த அறமாகும்.

        ‘‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
          மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று

இவ்வுலகிலே பிறந்த மக்கள் அனைவருக்கும் மறு பிறப்பு உண்டு
என்பதை அறியாமல் முதிர்ந்த பருவம் அடைவது மூப்பாகாது’’ (5-ஆம்
பத்து பா.10)

எவ்வளவு செல்வம் இருந்தாலும் இன்னும் செல்வம் வேண்டும் என்று ஆசைப்படுவோர் செல்வர்கள் அல்லர்; வறியவர்களே ஆவார்கள்.

           ‘‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
             நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை

ஆசையைக் காட்டிலும் பெரியதொரு வறுமை இல்லை’’ (6-ஆம் பத்து
பா.7) என்பதனால் இதைக் காணலாம்!