10. திரிகடுகம்
நூல் வரலாறு
திரிகடுகம் நூறு வெண்பாக்களைக் கொண்டது. புறப்பொருள் பற்றிக்
கூறும் நூல். இதை
அறநூல், நீதிநூல் என்றே சொல்லிவிடலாம். இதன்
வெண்பாக்கள் அவ்வளவு
கடினமானவை யல்ல. எளிதில்
பொருள் தெரிந்து
கொள்ளக்கூடியன. தமிழர்களின்
ஒழுக்கம்-பழக்க வழக்கம்-நேர்மையாக
நடக்க வேண்டும் என்பதிலே அவர்கள் காட்டிய
கவலை-
இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலிகளைத் திரிகடுகம் என்று நாட்டு வைத்தியர்கள்
கூறுவார்கள். இந்த மூன்று மருந்துகளைக் கொண்டே, உடல் நோயைத்
தடுத்துக்கொள்ள முடியும்; இது நாட்டு வைத்தியர்களின்
நம்பிக்கை. இன்றும்
திரிகடுகச் சூரணம் என்னும் மருந்து பல நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டு
வருகின்றது. இந்த மருந்தின் பெயரையே இந்நூலுக்கு வைத்தனர். இதற்குக்
காரணம் உண்டு. இந்நூலில்
உள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று
மூன்று
அறங்கள் சொல்லப்படுகின்றன. இம்மூன்று நீதிகளையும்
பின்பற்றி
நடப்போர்உள்ளத்திலே ஒரு நோயும் இன்றி
உவகையுடன் வாழமுடியும்;
வாழ்விலே குற்றம் வளராமல் மாசற்ற வாழ்வு நடத்த முடியும். இந்த
உண்மையைக்
கருதித்தான் இந்நூலுக்குத் திரிகடுகம் என்ற பெயர்
வைத்தனர்.
இந்நூலில் கூறப்படும் அறங்கள் எல்லாம் இக்காலத்திற்கு ஏற்றவை
என்று
சொல்ல முடியாது. கொள்ளத்தக்கவை
பல;
|