பக்கம் எண் :

64சாமி சிதம்பரனார்

New Page 2

தள்ளத்தக்கவையும் சில உண்டு. இவ்வுண்மையை உணர்ந்து படிப்பதே
அறிவுள்ளவர் கடமை.

இந்நூலாசிரியர் பெயர் நல்லாதனார். இவருடைய பெயரால், வேறு
நூல்களோ, செய்யுட்களோ காணப்படவில்லை.

நூறு வெண்பாக்களோடு, கடவுள் வாழ்த்து வெண்பா ஒன்றும்
காணப்படுகின்றது. இது திருமால் வணக்கம். இக் கடவுள் வாழ்த்து
நூலாசிரியரால் இயற்றப்பட்டதா? அல்லது பிற்காலத்தாரால் பாடிச்
சேர்க்கப்பட்டதா என்பது ஆராயத்தக்கது. இந்நூலில் உள்ள பாடல்களில்
பல, சிறந்த கருத்துள்ளவை.

நன்மை தராதவை

இந்நூலில் கூறப்படும் அறங்கள் பல; அவை ஒவ்வொரு மனிதனும்
பின்பற்றக்கூடிய வகையிலே அமைந்திருக்கின்றன; மக்கள் முன்னேற்றத்திற்கு
வழிகாட்டுவனவாக இருக்கின்றன; அநுபவத்திலே கண்டறிந்த
உண்மைகளாகவும் காணப்படுகின்றன.

  ‘‘கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்குஅறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும், பாத்து உண்ணும்
தன்மை யிலாளர் அயல்இருப்பும், இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊர்; வழக்கைத் தீர்த்து
வைக்கின்ற அறிவு முதிர்ந்தவர் இல்லாத சபை; தமக்கு உள்ளதைப்
பிறருக்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் தன்மை யில்லாதவர்களின்
பக்கத்திலே வாழ்வது; இம்மூன்றும் நன்மை தருவதில்லை’’ (பா.10)

மூன்று அருமையான செய்திகள் இவ்வெண்பாவிலே
அடங்கியிருக்கின்றன. ஒரு ஊர் என்றால் அந்த ஊரிலே கல்வி