கற்பிக்கும் ஆசிரியர்
இருக்கவேண்டும். ஆசிரியர் இருந்தால்தான் ஊரில்
உள்ள
பிள்ளைகள் கல்வி கற்க
முடியும். இல்லாவிட்டால் மக்கள்
தற்குறிகளாகத்தான்
இருக்க முடியும். அக்காலத்திலே
ஊர்ப்பொதுக்காரியங்களைக் கூட
ஆசிரியர்கள்தான்
முன்னின்று நடத்தி
வைத்தனர்.
ஒரு சபையென்றால்
அதில் கல்வி கேள்விகளிலே சிறந்தவர்கள்
இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சபையில் உள்ளவர்கள்
பயனுள்ள
பொருள்களைத் தெரிந்துகொள்ள முடியும். சபையினர்க்குள் கருத்து
வேற்றுமை
ஏற்படும்போது,
சரியான கருத்து இதுவென்பதையும் கண்டறிய
முடியும்.
அறிஞர் இல்லாத சபையால் யாருக்கும் எப்பயனும்
இல்லை. அது
வெறும்
வம்பர் மகா சபையாகத்தான் இருக்கும்.
நமது பக்கத்திலே
குடியிருப்போர் உதவி செய்யும்
தன்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களாயிருந்தால்தான்
ஒருவர்கொருவர் உதவி செய்து கொண்டு வாழலாம்.அவர்களால் நமக்கும்
நன்மையுண்டு; நம்மால் அவர்களுக்கும்
நன்மையுண்டு. பக்கத்தில்
இருப்பவர்கள்
தந்நலமே குறியாகக் கொண்டவர்களாயிருந்தால் நமக்கு
யாதொரு பயனும்
இல்லை.
செல்வத்தைச் சிதைப்பன
ஒருவனுடைய செல்வத்தைச்
சிதைக்கும் படைகள் இன்னின்னவை என்று
ஒரு வெண்பாவிலே கூறப்படுகின்றது.
|