கொள்ளுதல்; தன்
முன்னே காணப்படும் பல பொருள்களின் மேலும் ஆசை
வைக்கும் சிறுமைக் குணம்;
இவைகள் ஒருவனுடைய செல்வத்தைக்
கெடுக்கும்
ஆயுதங்களாகும்’’.
(பா.38)
ஒருவன் தன்
செல்வத்தைச் சிதையாமல் பாதுகாத்துப் பெருக்கிக்
கொள்ள
வேண்டுமானால் மேலே கூறிய
மூன்று குணங்களையும் விட்டுவிட
வேண்டும். தற்பெருமை
கூடாது; கோபம் கூடாது; கண்ட பொருள்கள்
மேலெல்லாம்
ஆசைப்படக் கூடாது; என்ற
உண்மையைக் கூறிய செய்யுள்
இது.
மனைவியின் மாண்பு
இல்லறத்திலே இன்பம்
தவழ வேண்டுமாயின் இல்லாள்
கற்புடையவளாயிருக்க வேண்டும். தன்
காதலனுக்குக் கூட்டாளியாகவும்,
தாயாகவும், மனைவியாகவும், இருந்து
உதவி செய்வதே கற்புள்ள பெண்ணின்
கடமை என்று கூறுகின்றது ஒரு செய்யுள்,
|