வறியவர்க்கு அவர்
விரும்பும் ஒன்றைக் கொடுக்கும் செல்வம்;
இவ்வுலகில் உள்ள
பொருள்களின் நிலையாமையைப் பற்றி
நினைக்கும்
நல்லொழுக்கம்; எவ்வுயிர்க்கும்,
அவைகள் துன்புறும்படியான கொடுமையைச்
செய்யாதநற்குணம்;
ஆகிய
இம்மூன்றுதன்மைகளும் அறத்தின் உயர்வை
அறிந்தவர்களிடம் உள்ளவை.’’
(பா.68)
அரசியல்
அரசன் நீதியுடன் நடந்தால்தான்
நாடு செழிக்கும்; குடிகள்
இன்புறுவர்;என்ற கருத்தை
இந்நூலாசிரியர் வற்புறுத்திக் கூறுகின்றார்.
‘‘தான் வாங்கிக்கொள்ளும்
பொருளுக்கு ஆசைப்பட்டுக் குடிகளைக்
கொடுமைப்படுத்தும் அரசன் உள்ள நாட்டிலே மழை பெய்யாது’’ (பா.50)
|