‘‘கொடுங்கோல் அரசன் பெருமையடையமாட்டான்’’
(பா.66)
‘‘கொடுமைகளை நீக்கிக்
குடிகளுக்கு நன்மை செய்கின்றவனே அரசன்
ஆவான்’’ (பா.96)
‘‘நம்பிக்கையுள்ள சேனை; எதிரிகள் பலர் முற்றுகையிட்டாலும் எளிதில் அழிக்க
முடியாத எல்லைப்புறப் பாதுகாப்பு; நிறைந்த செல்வச் சேமிப்பு; இவைகளே அரசர்க்குச்
சிறந்த உறுப்புக்களாகும்.’’ (பா.100)
இவ்வாறு அரசாட்சியைப் பற்றிக் கூறுகிறது இந்நூல்.
பார்ப்பார்
பார்ப்பாரைப்பற்றி இந்நூலிலே பலவிடங்களில் கூறப் பட்டிருக்கின்றன.
‘‘நன்கு உணர்வின் நான்மறையாளர்
அறத்தை நன்றாக உணரும் அறிவினையுடையவர்கள்; நான்கு
வேதங்களையும் கற்றவர்கள்’’ (பா.2)
‘‘மூன்று கடன் கழித்த பார்ப்பானும்
தேவர், முனிவர், பிதிரர் ஆகிய மூவருக்கும் செய்யும் மூன்று கடமைகளையும் செய்து
முடித்த பார்ப்பான்’’ (பா.34)
‘‘செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தல்
வேள்வியிலே செந்தீயை வளர்க்கும் அந்தணர்கள் தமக்குரிய அறத்தை
மறவாமல் பின்பற்றி வாழ்தல், மாதம் மும்மாரி பெய்வதற்குவிதையாகும்’’
(பா.98)
வேதம் ஓதல், மூன்று
கடன்களையும் செய்தல், வேள்வி செய்தல்,
அறநெறி தவறாமை
இவைகள் அந்தணர் கடமையாகும் என்பதை
மேலே
காட்டிய பகுதிகள் அறிவித்தன.
|