‘‘பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்
எவ்வளவு நாட்கள்தான்
பழகியிருந்தாலும் பார்ப்பாரை
நெருப்பைப்போல் நினைத்துப்
பழகவேண்டும். நெருப்பு
இன்றியமையாதது,
அதைப்போல அவர்களும்
அவசியமானவர்கள்; ஆதலால், அவர்களிடம்
நெருங்காமலும், நீங்காமலும் பழக
வேண்டும்’’.
இப்பகுதி, பண்டைக் காலத்திலே பார்ப்பார்கள் தமிழர் சமுதாயத்திலே
பெற்றிருந்த
செல்வாக்கைக்
காட்டுவதாகும்.
பழக்க வழக்கங்கள்
மனைவியைக் கோல்கொண்டு அடிப்பது அறியாமையாகும். (பா.3)
மாட்டு மந்தைக்குள், கையில் கோல் இல்லாமல் செல்லக்கூடாது. (பா.4)
தேவர், முனிவர், பிதிரர் இவர்களுக்கான கடன்களைச் செய்பவரே
அறிவுடைய
பார்ப்பார் ஆவர். (பா.34)
முயற்சியுள்ளவன் சூதாட்டத்தால் பொருள் சேர்க்க விரும்பமாட்டான்;
விளையாட்டுக்காகச்
சூதாடினாலும், அதிலே இலாபம் கிடைத்தால்
அப்பொருளையும்
ஏற்றுக்கொள்ளமாட்டான். (பா.42)
குடிகாரன் குடும்பம் வாழாது; வாழ்வது போலக் காணப்பட்டாலும்
விரைவில் அழிந்து
விடும். (பா.59)
பார்ப்பார் கடமை, வேதங்களைக் கற்றிருத்தல், வேதங்களைக் கற்றறிந்த
பார்ப்பனரே
சிறந்த
செல்வம் உள்ளவர்கள். (பா.70)
கொடுக்கும் பணத்திற்கு
வட்டி வாங்குவோன் பேராசைக்காரன்;
ஆசைக் கடலில்
அழுந்தியிருப்பவன் ஆவான். (பா.81)
|