செய்நன்றி மறந்தவன்; அறிஞர்கள் முன்னே பொய் புகல்வோன்;
அடைக்கலமாக வைத்த
பொருளைத் திருப்பிக்
கொடுக்காதவன்; இம்மூவரும்
மக்கள் பேற்றை இழப்பார்கள்.
கணவன் குறிப்பறிந்து நடக்கும் மனைவி; நெறி தவறாத தவசி;
செங்கோல் செலுத்தும்
அரசன்;
இவர்கள் மழை பெய் என்று சொன்னால்
மழை பெய்யும்.
அறநெறியிலே தவறாமல் வேள்வி செய்யும் அந்தணர்கள்; செங்கோல்
செலுத்தும்
அரசன்; கணவன்
கருத்தின்படி ஒழுகும் பெண்கள்; இவர்கள்
உள்ள நாட்டிலே
மாதம்மும்மாரி பெய்யும்.
அறம் புரியாதவர்கள் நரகத்தை அடைவார்கள்; பழவினையினால் தான்
ஒவ்வொருவர்க்கும் இன்பதுன்பங்கள் உண்டு.
உயிர்க்கொலை செய்தல் பாவம்; புலால் உண்ணுதல் அறநெறிக்கு
ஏற்றதன்று.
இவைபோன்ற பல நம்பிக்கைகள் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்தன.
இவைகளைத்
திரிகடுகப்
பாடல்களிலே காணலாம்.
திருக்குறளின் கருத்துக்கள் பல, திரிகடுகப் பாடல்களிலே சுருக்கமாகக்
கூறப்படுகின்றன.
‘‘மறுமைக்கு அணிகலம் கல்வி’’ (பா.52)
என்பது, ‘‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும்
ஏமாப்பு உடைத்து’’
என்ற
குறளின் கருத்தாகும்.
‘‘இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமை’’ (பா.68)
என்பது ‘‘வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறி எதிர்ப்பை
நீரது
உடைத்து’’ என்ற குறளின் கருத்தாகும்.
|