தந்தையாயிருந்தாலும் சரி அவன் அடக்க மற்றவனாயிருப்பின், அவன்
சொல்லைக் கேட்டு
நடக்காமல்
இருப்பதே நலம்’’ (பா.8)
‘‘பிச்சை புக்காயினும் கற்றல் இனிதே (பா.2)
பிச்சையெடுத்தாவது கல்வி
கற்றல் மிகவும் சிறந்தது.” இது அனைவரும்
போற்றக்கூடிய
சிறந்த அறிவுரையாகும்.
‘‘பற்பலநாளும் பழுதுஇன்றிப் பாங்குடைய
கற்றலின் காழ்இனியது இல்.
பல நாட்களும் சோர்வில்லாமல் சிறப்பு நூல்களைக் கற்பதைவிட மிகச் சிறந்தது
வேறொன்றும்
இல்லை’’ இவை கல்வியின் சிறப்பை வலியுறுத்தின.
‘‘ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே
வேறு ஒரு உயிரின் உடம்பைத் தின்று, தன் உடம்பை வளர்க்காமல்
இருப்பதே சிறந்த
அறம்’’ (பா.5) என்று சொல்லி மாமிச உணவைக் கூடாது
என்று மறுக்கின்றது.
‘‘கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே
கடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலே
சிறந்தது’’ (பா.11)
‘‘கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
பணம் இல்லை என்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல்
விட்டுவிடக்கூடாது; கடன்
வாங்கியாவது அவற்றைச் செய்து முடிப்பதே
நன்று’’(பா.43) இவைகள் கடன் வாங்குவதை மறுத்தும்,
அவசியமானால்
கடன்
வாங்கலாம் என்றும் கூறின.
|