எந்த அளவிலும் மிகவும் பால் கறக்கும் கன்றோடு கூடிய பசுவை
உடையவன் செய்யும்
விருந்தே சிறந்தது என்பர்’’
யார் செய்யும் விருந்து சிறந்தது என்பதை எடுத்துரைத்தது இச்செய்யுள்.
மற்றவர்கள்
செய்யும் விருந்தைக் காட்டிலும் கறவைப் பசுவை
வைத்திருக்கின்றவன் செய்யும் விருந்தே
சிறந்ததாம். நல்ல பால், நல்ல நெய்,
நல்ல தயிர் இவை விருந்திற்கு வேண்டியவை.
விலைக்கு வாங்கினால்
அவ்வளவு நல்லதாகக் கிடைக்காது. சொந்தமாக மாடிருந்தால்தான்,
கலப்பற்ற பால், தயிர், நெய் கிடைக்கும். ஆதலால் கறவைப்
பசுவையுடையவன்
செய்யும்
விருந்தே சிறந்த சுவையுள்ள விருந்தாகும் என்று
கூறிற்று.
திருக்குறள்
இனியவை நாற்பதிலே திருக்குறளின் கருத்துக்கள் பல
காணப்படுகின்றன.
ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிது
|