13. நான்மணிக் கடிகை
நூலின் பெருமை
நான்மணிக் கடிகை ஒரு சிறந்த நூல். இதனுள் இன்று 106 வெண்பாக்கள்
காணப்படுகின்றன. நூறு வெண்பாக்கள் தாம் நூலாசிரியரால் பாடப்பட்டிருக்க
வேண்டும்.
ஆறு வெண்பாக்கள் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டன.
இவற்றுள் இரண்டு வெண்பாக்கள்
கடவுள் வாழ்த்தாக
இருக்கின்றன.
இரண்டும் திருமாலைப் பற்றியே கூறுகின்றன இந்த
இரண்டும், நூலினுள்
நான்கும்,இந்நூலாசிரியரால்
பாடப்பட்டவை அல்ல என்றே கொள்ள
வேண்டும்.
நான்மணிக் கடிகை-நான்கு மணிகள் பதித்த ஆபரணம். ஒவ்வொரு
பாடலும்
ஒவ்வொரு அணிகலன்.
அந்த அணிகலன்களிலே நான்கு நான்கு
இரத்தினங்கள் பதித்து
வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே நான்மணிக்
கடிகை
என்பதன் விளக்கம்.
நான்மணிக் கடிகையின் ஒவ்வொரு வெண்பாவும் நந்நான்கு நீதிகளைத்
தெளிவாகக்
கூறுகின்றன.
படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கும்விதத்தில்
நறுக்கு
நறுக்கென்று நீதியைச்
சொல்லுகின்றன.
திரிகடுகம், சிறுபஞ்ச
மூலம், ஏலாதி என்னும் நூல்களின்
வெண்பாக்களைவிட இந்நூல் வெண்பாக்கள் இனிமையானவை;தெளிவானவை;
விளக்கமானவை. திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி மூன்றும் மருந்தின்
|