பக்கம் எண் :

88சாமி சிதம்பரனார்

New Page 1

பெயரைக் கொண்டவை; ஆதலால் அவைகளின் நடையிலும் கொஞ்சம்
கசப்பும் காரமும் அமைந்திருப்பது இயற்கை. நான்மணிக் கடிகையோ
ஒளிபொருந்திய மணியாரம்; ஆதலால் இதன் செய்யுட்கள் அவைகளைவிட
ஒளிபெற்று விளங்குவதும் இயல்புதான். இந்நூலாசிரியர் பெயர் விளம்பி
நாகனார். இவர் பெயர் நாகனார் இவர் வாழ்ந்த ஊர் அல்லது பிறந்த ஊர்

விளம்பியாக இருக்கலாம். ஆதலால் ஊர்ப்பெயரும் சேர்ந்து விளம்பி
நாகனார் என்று பெயர் பெற்றார். இவரைப் பற்றிய வேறு வரலாறு ஒன்றும்
தெரியவில்லை.

பாடல்களின் சிறப்பு

எதையும் தெளிவாகக் கூறுவதே இந்நூல் வெண்பாக்களின் சிறப்பாகும்
சில வெண்பாக்களைப் படித்தாலே இந்த உண்மையைக் காணலாம்.
 

  ‘‘கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்; மான்வயிற்றின்
ஒள்அரி தாரம்பிறக்கும்; பெரும் கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்
நல்ஆள் பிறக்கும் குடி.
 

புகைத்தால் நறுமணம் தரும் அகில் கட்டை கள்ளியின் நடுவிலே
உண்டாகும். மானின் வயிற்றிலே ஒளியுள்ள அரிதாரம் பிறக்கும்;
உப்புச்சுவையுள்ள பெரிய கடலிலே மிகுந்த விலையுள்ள முத்து உண்டாகும்.
ஆதலால் நல்ல மக்கள் பிறக்கும் குடி இன்ன குடிதான் என்று யார்
அறிவார்?’’ (பா.4)

ஒருவனுடைய குடிப் பிறப்பைக்கண்டு அவனை உயர்வாகவோ
தாழ்வாகவோ எண்ணக் கூடாது; அவனுடைய கல்வி, அறிவு, ஒழுக்கங்களைக்
கொண்டே அவனை மதிக்க