பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்89

New Page 1

வேண்டும்; இழிந்த குடியிலே பிறந்தாலும் கல்வி அறிவு, ஒழுக்கமுள்ளவன்
உயர்ந்தவன்; இவைகள் இல்லாதவன் உயர்ந்த குடியிலே பிறந்தவனாயினும்
இழிந்தவன்; என்ற கருத்தை வலியுறுத்துகின்றது இச்செய்யுள்.

உறக்கம் இல்லாமல் துன்புறுகின்றவர்கள் யார் யார்? என்று
உரைக்கின்றது ஒரு செய்யுள்.
 

  ‘‘கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்
 

திருடுவோம் என்று எண்ணிக் காலம் பார்த்திருக்கும் கள்வர்களுக்கும்
தூக்கம் இல்லை; எப்பொழுதும் காதலியிடமே உள்ளத்தை
அடிமையாக்கியிருப்பவர்களுக்கும் உறக்கம் இல்லை. சிறந்த செல்வப்
பொருளை விரைவிலே பெருக்குவோம் என்று எண்ணி

உழைப்பவர்களும் தூங்கமாட்டார்கள்; உழைத்துச் சேர்த்த பொருளைக்
காப்பாற்றுகின்றவர்களுக்கும் உறக்கம் இல்லை’’ (பா.7) இந்நால்வகையினரும்
தங்கள் நினைப்பை வேறு இடத்திலே செலுத்தியிருப்பார்கள்; ஆகையினால்
மன அமைதியுடன் உறங்க மாட்டார்கள்.

சிலருக்குத் தம்மூர், வேற்றூர் என்ற வேறுபாடே தோன்றாது; எல்லா
வூரையும் தம்மூர் போலவே எண்ணுவார்கள். அவர்களுக்குத் தம்மூரிலே
கிடைக்கும் அத்தனையும் வேற்றூரிலும் கிடைக்கும். இத்தகையோர் யார்?
என்று சொல்லுகிறது ஒரு பாட்டு.
 

 

‘‘நல்லார்க்கும் தம்ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச்
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை;- அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ்வூரும் ஊர்.