பக்கம் எண் :

92சாமி சிதம்பரனார்

New Page 1

‘‘வெல்வது வேண்டின் வெகுளி விடல்

பிறரை வெல்ல வேண்டினால் வெகுளியை-அதாவது கோபத்தை-
விட்டுவிட வேண்டும்; அப்பொழுதுதான் ஆழ்ந்து சிந்தித்து
அவரைத்தோற்கடிக்கலாம்’’ (பா.15) இவைகள் சினத்தைப் பற்றிக் கூறியவை.

புலவர் தேவர்களுக்குச் சமமானவர்கள். ‘‘தேவர் அனையர்
புலவரும்’’
புலவர்கள் தேவர்களைப் போன்றவர்கள்.          (பா,74)

இல்லத்திலே இருந்துகொண்டு விபசாரம் செய்கின்றவள் எமன் ஆவாள்.
‘‘கூற்றமே இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள்’’ இல்லத்திலே
இருந்துகெட்டவழியிலே நடக்கின்ற பெண், தன் கணவனுக்கு எமன்
ஆவாள்.

(பா.83)

என்றும் நன்மைகளைச் சிந்திப்பவர்களே அந்தணர் ஆவார். ‘‘என்றும்
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம்’’
எப்பொழுதும் நல்ல செயல்களிலே
கருத்தைச் செலுத்துவதே அந்தணர்களின் எண்ணமாக இருக்க வேண்டும்.

(பா.85)

பலதார மணம் தவறு; பல மனைவிகளை மணந்திருப்பவன் வறுமையால்

வாடுவான். ‘‘நிரப்பிடும்பை பல்பெண்டிர் ஆளன் அறியும்’’ வறுமைத்
துன்பத்தைப் பல பெண்களை மணந்தவனே அறிவான்.                        (பா.95)

கொள்கைகளும் நம்பிக்கைகளும்

மாந்திரிகர் மந்திரத்தினால் பாம்பின் கோபத்தை அடக்கிவிடுவார்கள்;
அதைத் தன் வசப்படுத்திக் கொள்வார்கள்                        (பா.10)

தான் இறந்தபின் தன்னுடன் வருவது தான் செய்த அறத்தின்
பயனைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.                                  (பா.15)