தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆளும் தன்மையுள்ளவனே தவம்
புரிவதற்குத்
தகுதியுள்ளவன். (பா.16)
கொல்லுவதற்காகவே பிற உயிர்களை வளர்ப்பது குற்றமாகும்;
விலைக்குப் புலால்
வாங்கிச் சமைத்துச் சாப்பிடுவதும் குற்றமாகும். (பா.26)
அந்தணர்கள் உயர்ந்த பிறப்புள்ளவர்கள். (பா.33)
மையிட்டுக் கொள்வதனால்
கண்கள் அழகாகக் காணப்படும்.
ஆதலால்தான் பெண்கள்
கண்ணுக்கு மையிட்டுக்
கொள்ளும் வழக்கம் நீண்ட
காலமாக நிலவி வருகின்றது.
(பா.36)
தெய்வத்தை அடைந்து வாழ்த்தி வணங்கினால் வேண்டும் வரங்களைப்
பெறலாம். (பா.61)
திருமகள் கருணையினால்தான் ஒருவனுக்குச் செல்வம் உண்டாகும்.
(பா.65)
தந்தையின் பெருமையையும், பண்பையும், அவனுடைய மகனால்
அறிந்து கொள்ளலாம்;
பூர்வ வினையை வெல்ல முடியாது; அது தன்
பலனைத் தந்தே தீரும். புலால்
உண்ணல்
அறமன்று; கள்ளுண்டல் தீமை
தரும், போர்
செய்வதற்குரிய படைகளிலே
யானைப்
படைகளே சிறந்தவை.
கல்வி கற்பது
மக்கள் கடமை; கற்றவர்களே சிறந்தவர்கள்.
இக்கருத்துக்கள்
பல பாடல்களிலே
காணப்படுகின்றன.
திருக்குறள் கருத்துக்கள்
நான்மணிக்
கடிகையிலே திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றைக்
காணலாம்.
‘‘கெட்டறிப
கேளிரால் ஆயபயன்’’
தமக்குக் கேடுவந்தபோது
உறவினரால் ஆகும்
பயனைக் கண்டறிக;
(பா.3) என்பது நான்மணிக் கடிகை.
‘‘கேட்டினும்
|