‘‘சுருக்குக செல்லா இடத்துச் சினம்’’ தன் சினம் செல்லாத இடத்திலே
அச்சினத்தைச்
செல்லாமல் சுருக்கிக் கொள்ளுக; என்பது நான்மணிக்கடிகை.
(பா.87) தன்னைக் காட்டினும்
வலியாரைச் சினந்து கொள்வதால்
தனக்குத்தான்
தீமையுண்டாகும். தன்னை விட
வலியாரிடம் தன் சினம்
செல்லாது. ஆதலால்
அச்சினத்தை அடக்கிக்கொள்ளுவதே
அறிவுடைமையாகும். இக்கருத்து, ‘‘செல்
இடத்துக் காப்பான் சினம் காப்பான்
அல் இடத்துக்,
காக்கின் என் காவாக்கால்
என்?’’ என்ற திருக்குறளிலே அமைந்திருப்பதைக் காணலாம்.
திருக்குறளின் கருத்தைக் கொண்ட இவைபோன்ற பல பாடல்கள்
நான்மணிக்கடிகையிலே அமைந்திருக்கின்றன. நான்மணிக் கடிகையைப்
படிப்போர்
அவற்றைக் காணலாம். இந்நூல் தமிழரின், பண்பாட்டை
விளக்கும்
சிறந்த நூலாகும்.
அறநெறியிலே நடந்து கொள்ளும்படி
அறிவுறுத்தும் அழகான
வெண்பாக்களைக் கொண்ட
அருமையான நூல்.
|