5
5. எழுவாய்ச் சொல்
எழுவாய் பெயர்ச்சொல்லாகவே
யிருக்குமென்று இதுகாறும் எல்லாச் சிற்றிலக்கணங்களுள்ளும் கூறப்பட்டது. அது ஆராய்ச்சியின்றி
வழிவழி வந்ததோர் கூற்றாம்.
எழுவாய் நிகழ்கால வினையெச்சமாகவும்
இருக்கும்.
எ-டு
: |
அவனுக்குப் பாடத் தெரியும்
= அவனுக்குப் பாட்டுத் தெரியும். |
பாட என்பது எழுவாய்.
ஆங்கிலத்தில்
infinitive
mood (நிகழ்கால
வினையெச்சம்) எழுவாயாய் வருதலை ஒப்புநோக்குக. இன்னோரன்ன இடங்களிலெல்லாம் ஒத்துப்
பார்வை இலக்கணமே (Comparative
Grammar) பயன்படு
மென்க.
இனிச் செயப்படுபொருளும் எழுவாய்
போல நிகழ்கால வினை யெச்சமா யிருக்குமென்றறிக.
எ-டு
: |
அவன் பாடத் தெரிந்துகொண்டான்
= அவன் பாட்டைத் தெரிந்துகொண்டான். |
பாட செயப்படுபொருள்.
6.
உரிச்சொல் (Poetic
Diction)
"உரிச்சொற் கிளவி விரிக்குங்
காலை |
|
.............................................................. |
|
எச்சொல் லாயினும் பொருள்வேறு
கிளத்தல்" |
(தொல்.சொல்.
782) |
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்குச்
சேனாவரையர்,
"தமக்கியல்பில்லா விடைச்சொற்
போலாது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின், உரிச்சொல்லாயிற்று.
பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியவாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாரு முளர்.
"இசை குறிப்புப் பண்பென்னும்
பொருளவாய்ப் பெயர் வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தடுமாறி ஒரு சொல் ஒருபொருட்
குரித்தாதலே யன்றி ஒருசொற் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்
லென்றும், அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் வெளிப்படாதவற்றை
வெளிப்பட்டவற்றோடு சார்த்தித் தம்மை யெடுத்தோதியே அப் பொரு ளுணர்த்தப்படு மென்றும், உரிச்சொற்குப்
பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையு முணர்த்தியவாறு.
மெய்தடுமாறலும் ஒருசொற்
பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமையும் உரிச்சொற்கு உண்மையான் ஓதினாரேனும்,
|