New Page 1
அடைந்தது என்பது தெரியவில்லை.
ஆயினும், பழைய காலத்திலேயே இந் நாட்டில் பலவகை லிபிகள் வழங்கி வந்தனவென்பது, பண்டை நூல்களினின்றும்
தெரியவருகின்றது.
"சற்றேறக் குறைய கி.மு. 300 ஆம்
ஆண்டில் எழுதப்பட்டதாகக் கொள்ளப்படும் ஸமவாயாங்க ஸூத்ரம் கி.மு. 168ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகக்
கொள்ளப்படும் பண்ணாவணா ஸூத்ரம் முதலிய ஜைன நூல்களில், அக் காலத்தில் பதினெட்டு வகை
லிபிகள் வழங்கி வந்தன வென்பது கூறப்பட்டிருக்கின்றது. மஹாவஸ்து என்னும் நூலில், முப்பது வகை
லிபிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லலிதவிஸ்தரம் என்னும் நூலோ, புத்தர் காலத்தில்
அறுபத்து நான்கு வகை லிபிகள் இருந்தனவென்று தெரிவிக்கின்றது....
"அந்த நூல்களில் உள்ள அட்டவணைகளில்
காணப்படும் பெயர்களுள் பல ஒத்திருக்கின்றன. அவற்றுள் நான்கு முக்கியமானவை களாகவும், சரித்திர
உண்மைக் கேற்பனவாகவும் உள்ளன. அவை பின்வருமாறு:
1. |
ப்ராஹ்மீ
(Brahmi) அல்லது பம்பி
(Bambhi) |
|
|
2. |
கரோஷ்டீ
(Kharosthi) அல்லது கரோட்டி
(Kharotthi) |
|
|
3. |
த்ராவிடீ
(Dravidi) அல்லது டாமிலீ
(Damili) |
|
|
4. |
யவணாணியா
(Yavananaiy) அல்லது யவணாலியா
(Yavanaliya)'' (ப.95). |
நெடுங்கணக்கு வண்ணமாலை முதன்முதல்
தமிழிலேயே தோன்றிற்று. அதைப் பின்பற்றிய வடநாட் டெழுத்தே பிராமி.
சமணமும் புத்தமும் கி.மு. 6 ஆம்
நூற்றாண்டில் தோன்றின. அவற்றிற்கு முந்தினது ஆரிய வேதமதம் அல்லது வேள்வி மதம். ஆரியர் இந்தியாவிற்குட்
புகுந்தது கி.மு. 2000. ஆரிய மொழிகட்கு அடி மூலம் வட திரவிடம். அது தென்றமிழின் திரிபு.
கரோட்டி வடமேலையிந்தியாவிற்
சில நூற்றாண்டு வழங்கிக் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் மறைந்தது.
யவனானி என்பது கிரேக்க எழுத்து.
யவனம் என்பது கிரேக்க நாட்டிற் கொரு பெயர். கிரேக்கம் உள்ளிட்ட மேலையாரியம் வடதிரவிடத்
திரிபென்பது மேற்கூறப்பட்டது.
பிராமி என்பது தமிழ் நெடுங்கணக்கின்
வடநாட்டுத் திரிபென்பதும் மேற்கூறப்பட்டது. அல்லாக்கால், திராவிடீ என்று ஏன் தமிழெழுத்தைப்
பிரித்தல் வேண்டும்? இவையெல்லாம் தமிழர் அடிமைத்தனத்தின் விளைவே.
|