|
21. தமிழின் என்றுமிளமை |
|
'கண்ணா கருமைநிறக் கண்ணா' என்ற மெட்டு |
ப. |
| என்னே! தமிழ் இளமை என்னே! - அதற் | | கீடான தொன்றில்லையே - இதை | | மறுப்பாருண்டோ என்றும் மறைப்பாருண்டோ - எதிர் | | மாற்றாரும் மறப்பாருண்டோ (என்னே) |
|
அ. 1 |
| முதன்மாந்த ரொடுதோன்றி | | முதிதாயினும் - மக | | மொழியாவும் பலவாகக் | | கிளைபோயினும் | | இதுபோதும் முன்போல்மெல் | | லியல்தாங்கியே | | இளஞ்சேயர் பிணியார்வாய் | | எளிதாகவே (என்னே) |
|
2 |
| இலத்தீனம் வடநாவல் | | மறையாரியம் | | ஏராளந் துணைகொண்டும் | | இழவானவே | | இனத்தாரும் வேற்றாரும் | | நெடுங்காலமாய் | | எதிர்த்தேதீங் கிழைத்தாலும் | | இருக்கும் தமிழே (என்னே) |
|
22. தமிழின் தன்னேரின்மை |
|
பண் - (காப்பி) தாளம் - முன்னை |
ப. |
| தானே தனக்குவமை - தமிழ் இம்மை | | தேனே கரும்பே தெளிவே தேவர் உண்ணும் | | தீஞ்சுவை யின்னமுதே யென்ப தவமே (தானே) |
|