பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்65

5
தாயையுங் கொல்லவே தயங்கார் சிலர் - அவர்
தாய்மொழி யைக்கொல்லத் தாராளமே - கொள்வர்
பாராளவே - கொடுங்
காராளரே (வழங்)
6
தமிழறியார் தமிழ் அதிகாரிகள் - எனத்
தான்றோன்றித் தனமானத் தருக்கி யின்றே - மிகச்
செருக்கி நின்றார் - உரை
பெருக்குகின்றார் (வழங்)
7
தமிழொன்றே உலகத்தில் தனிமொழியாம் - அதன்
தனிச்சொல்லை வீழ்த்த வந்தன வடசொல் - அங்ஙன்
வீழ்ந்த சொல்லை - நாமே
மீண்டும் கொள்வோம் (வழங்)
74. அயன்மொழி யெழுத்தை யகற்றல்
(இசைந்த மெட்டிற் பாடுக.)
1
அயன்மொழிச் சொற்களைப் போன்றே
       அயன்மொழி யெழுத்தும் வேண்டா
இயலறி தமிழச் சான்றோர்
      இயல்தமி ழெழுத்தே ஆண்டார்.
2
ஒற்றரே வருவது முன்னே
        உறுபடை வருவது பின்னே
மற்றொரு மொழியெழுத் தின்னே
        மருவிடின் சொலும்வரும் மன்னே.
3
வடசொல் தமிழெழுத் தாலே
      வழங்குக வென்றது நூலே
குடசொல் ஒன்றிலை மேலே
      குறித்ததொல் காப்பியக் காலே.