பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்1

தமிழ் ஏத்து
"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்."
(தண்டியலங்கார வுரைமேற்கோள்)
1. கடவுள் வணக்கம் (படர்க்கைப் பரவல்)
'பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு
இசைந்த பண்ணிற் பாடுக
தாளம் - முன்னை
ப.
காலையிலே விழித்தெழுவோம் - முதற்
கடவுளின் அழகிய கழலிணை விழுவோம்
கைகுவித்தே தொழுவோம் (நாளும்)
(காலை)
அ.
வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி
வினைகளை முறையே நிறைவேற்றி
மாலையில் நல்ல மனவமைதியுடன்
மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்)
(காலை)