|
உ.1 |
| குமரிநாட்டில் தமிழொன்றே முன்குலவ வில்லையா | | இன்றும் - நிலவ வில்லையா | | தமிழ்நாடென்னும் பேரைச் சொல்லவும் | | தாங்காத் தொல்லையா | | இந்தத் - தமிழன் எந்நாள் அடைவானோ | | விடுதலைதான் சொல்லையா (தமிழ்) |
|
2 |
| சிவனும் மாலும் தமிழர் தெய்வம் தெரிய வில்லையா | | ஆய்வும் - புரிய வில்லையா | | செயற்கை மொழியில் வழிபடுவதைத் | | தீர்த்தல் தொல்லையா | | இந்தச் சிறுமைத் தமிழன் மயலும் எந்நாள் தெளியும் சொல்லையா (தமிழ்) |
|
3 |
| இந்தியாலே என்ன நன்மை எண்ண வில்லையா | | மனத் - திண்மை யில்லையா | | இலக்கியநலம் இல்லாமொழியை விலக்கல் தொல்லையா | | இந்த - எளிமைத் தமிழன் வலிமை | | எந்நாள் எய்தும் சொல்லையா (தமிழ்) |
|
4 |
| தேயவொற்றுமை ஆங்கிலத்தால் திகழ வில்லையா | | நாமும் - புகழ வில்லையா | | தேவநாகரி வேண்டாவென்று தெரித்தல் தொல்லையா | | இந்தத் - தீங்கெல்லாம் இந்நாட்டில் எந்நாள் | | நீங்கும் சொல்லையா (தமிழ்) |
|
128. தமிழன் பேதைமை |
|
'கண்டதுண்டோ கலியுகத்தில்' என்ற மெட்டு |
ப. |
| ஏதமேகொண் டூதியத்தை இழப்பதே யன்னோ - பெரும் | | பேதைமையென் றேபுலவர் பெருமகன் சொன்னான். |
|