|
து. ப. |
| ஏதிலரை நம்பி இந்த ஏழைத் தமிழன்றான் - இன்னும் | | ஏதும் அறிவே யில்லாமல் இடரில் அமிழ்கின்றான் (ஏதமே) |
|
(உரைப்பாட்டு) |
| இனிதான தேங்கதலி யிருக்கவும் அதைவிட்டே | | எட்டிக் கனிபறித்துண் டிறப்பதுபோல் | | கனிவான செந்தமிழும் கண்திறந்த ஆங்கிலமும் | | கற்காமல் இந்தியைக்கற் றுழப்பதுவே (ஏதமே) |
|
129. தமிழன் பேதைமை |
|
'கத்தன வாரிகி' என்ற மெட்டு |
பண் - (தோடி) தாளம் - முன்னை |
ப. |
| எத்தனை சொன்னாலும் எட்டுணையேனுந் தெரியவில்லை | | பித்தமோ தமிழனுக்கே பேதைமையோ பேய்க்கோளோ (எத்தனை) |
|
து. ப. |
| முத்தமிழ் நாகரிகம் முத்தைநாள் குமரிகண்ட | | சித்தர்பின் னோரிது கேடுற ஏவர் சாவிப்போ (எத்தனை) |
|
அ. |
| எத்துகையே மேற்கொண்டார் இத்தமிழ் நாடுதான் வந்து | | புத்தேளிர் மரபென்று போற்றவே தம்மை | | மெத்தெனும் ஒலிமிஞ்சும் நற்றமிழைக் கோவில் நீக்கிப் | | பொற்றா மரைக்குள மன்றமும் போக ஆரியங் கொண்டான் (எத்தனை) |
|