|
130. தமிழரின் ஐவகை அடிமைத்தனம் |
|
'தாதாபாய் நவரோசி' என்ற மெட்டு |
ப. |
|
து. ப. |
| அந்தோ தமிழர் முந்தே யமிழும் (ஆரிய) |
|
உ |
| ஐந்தறுவர் மந்திரிமார் ஆகமுழு அடிமைத்தனம் | | அந்தமிழர் விடுதலையாய் அழகிய பெயர் பெறவைத்தனம். |
|
(உரைப்பாட்டு) |
| அடிமைத்தனத்தையே உரிமைத்தனமாய்க் கொள்ளுதல் | | அவ்விரண்டின் வேறுபாடறியாமை | | மடிமைத்தனத்தாற் பொறுத்தல் தன்னலம் பெறுதல் | | மாறாயெதிர்த்தல் தமிழர் நிலையாமே |
|
உ |
| செந்தமிழைச் சிறையில் வைக்கும் செவ்வுரைஞர் வேலை நீக்கும் | | வந்தவரை வாழவைக்கும் வதிபழங்குடி மாளநோக்கும் (ஆரிய) |
|
131. தன்மானமிழந்த தமிழன் |
|
'சங்கல்ப மெட்டிதோ மனசா' என்ற மெட்டு |
பண் - (கரகரப்பிரியை) தாளம் - முன்னை |
ப. |
| தன்மானமே தமிழன்பால் இல்லை | | தாழ்வுணர்ச்சி யாலே தானேகெடும் ஒல்லை. |
|
து. ப. |
| தென்மாநிலம் திகழ்தமிழ் எல்லை | | திருவள்ளுவன் தெளிவித்தும் தென்சொல்லை. (தன்) |
|