பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்117

2
கிளிப்பிள்ளைக் கொருமொழி பலமுறையும்
     கிளப்பது போலநக் கீரன்முதல்
சீரியா ரேபலர் கூறிவந்தும் - வட
    ஆரியம் உயர்வெனத் தேறுவதே.
(இது)
3
அறிவியற் கலைபல ஆய்ந்தறிந்தும்
     ஆடையைத் தூயதாய் அணிந்திருந்தும்
ஆரிய னேஉடல் தூயனென - மதி
    மாறிய தமிழனே தாழுவதே.
(இது)
135. தமிழில் எடுப்பொலி யில்லை யென்பாரின் தாழ்நிலை
பண் - (செஞ்சுருட்டி)
தாளம் - முன்னை
ப.
கண்கவர் வண்ணம் ஒட்டிற் கிலையென்றே - புளிங்
    காட்டுமாங் கனியுண்ணுங் காட்டானே
து. ப.
பண்படு தமிழ் எடுப்பொலி யில்லை - என்றே
    பாட்டின் பொருளறிய மாட்டானே
(கண்)
உ.
சின்னஞ்சிறுவர் எனச்சிறு பண்பே - மிகச்
     சீரியதென்று கொள்ளுஞ் சிறியோனே
தன்னந்தனியே திருக்குறள் கோவை - முதல்
    தமிழ்நூலின் இன்னோசை கேட்டறி யானே
(கண்)