|
4 |
| தன்மையும் தனிமையும் தலைமையும் தழுவிய | | தாய்மொழியைத் தள்ளிப் | | புன்மையும் புதுமையும் புரைமையும் புணர்மொழிப் | | போலியை மேற்கொள்வார். |
|
5 |
| முழுமுதற் கடவுளை வழிபடும் விழுமிய | | முதுபழ மதமிருக்க | | வழுவிய கருத்தினாற் கெழுமிய சிறுதெய்வத் | | தொழுகையே புரிந்திடுவார். |
|
138. பிராமணியம் |
|
'பச்சைமலை பவழமலை' என்ற மெட்டு |
1 |
| ஆரியம்பி ராமணியம் ஆயிரண்டும் ஒன்றே | | சாரும்ஒரு சார்தமிழர் சார்புகொண்டு நின்றே. |
|
2 |
| ஆரியப்பி ராமணரும் அவர்வழியி னோரும் | | பாரிலுள்ள தேவரெனல் பிராமணியம் பாரும். |
|
3 |
| ஆரியப்பி ராமணரைத் தேவரென்ற தானே | | அவர்மொழியும் தேவமொழி யாயினது தானே. |
|
4 |
| அறுப்பவனை நம்புகின்ற ஆடுபோன்ற தமிழர் | | திருக்குறளை நம்பாது திறனிழந்தார் திமிறி. |
|
5 |
| பல்வேள்விச் சாலைமுது குடுமிப்பெரு வழுதி | | வல்லோசை வடமொழியை வளர்த்துவிட்டான் வழுவி. |
|