|
6 |
| கடைக்கழகம் அவன்செயலாற் கலைந்துபோன தாலே | | கொடைக்காவல் தமிழ்மொழிக்கே குன்றியது மேலே. |
|
7 |
| எழுநிலத்தும் செய்யுள்வகை இயற்றிவந்த தமிழர் | | எழுநூறாண் டுயர்கல்வி யிழந்துவிட்டார் அமிழ. |
|
8 |
| இனமொழிநா டென்றிவற்றின் வரலாறே யறியார் | | இங்கவர்நூற் றெண்பதின்மர் இன்னமுந்தற் குறியார். |
|
9 |
| பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரமே யின்றிப் | | படித்தவரும் படியாதார் என்றிருப்பர் குன்றி. |
|
10 |
| தகுதியில்லாத் தமிழர்இன்று தலைமைபெற நாடி | | மிகுதியாக ஆரியத்தை மேம்படுத்தார் கூடி. |
|
139. பிராமணிய வுண்மை |
|
பண் - (காம்போதி) தாளம் - இணை |
ப. |
| என்றும் பிராமணரை ஏற்றித் தமிழரேதம் | | இனத்தைக் காட்டிக் கொடுக்கும் இழிவே பிராமணியம் |
|
து. ப. |
| குன்றும் திறமையுள்ளோர் கோடரிக்காம்பா யன்றிக் | | கொள்ளமுடியு மோசொல் கோவியல் மாமணியம் (என்றும்) |
|
உ.1 |
| கொண்டான்போல் இன்றுங்கூறிக் கொழுத்தபதவி தாங்கிக் | | குலமொழியைக் கெடுப்பார் பலரேபே ராசிரியர் | | கொண்டாடும் ஆள்வினையும் குலத்தில் தம்மையே தாழ்த்திக் | | கொண்டார் தந்நலம் மிகக்கொண்டாரே மாசிறியர் (என்றும்) |
|