|
2 |
| குன்றேபோலும் யானையைக் கொல்லவொண்ணும் எளிதாய்க் | | கொடும்பெருஞ் சுடுகலம் கொண்டே குறுமகனும் | | குன்றாத அதிகாரம் குடவோலையாற் குடிகள் | | கொடுத்தபின் கொண்டவரைக் குறைகூறுவ தெங்ஙனம் (என்றும்) |
|
3 |
| குட்டக்குட்டக் குனிந்து கொடுக்கின்றவனும் முட்டாள் | | குனியக்குனிய மேலுங் குட்டுபவனும் முட்டாள் | | இட்டுக்கட்டி மேன்மேலும் ஏமாற்றுவோனும் முட்டாள் | | என்றும் தெளியாமலே ஏமாறுவோனும் முட்டாள் (என்றும்) |
|
4 |
| இருவர் இணைந்து செய்யும் இழுக்கான செயலிலே | | ஒருவரையே கடிந்தால் ஒருபக்க மான குற்றம் | | அரிய தமிழ்த் தொண்டுகள் அழகாய்ப் பிராமணரே | | ஆற்றியுள்ளார் சிலரும் தூற்றாதீர் குலம் முற்றும் (என்றும்) |
|
140. தமிழப் பிராமணரைக் கெடுப்பவர் தமிழரே |
|
'மகமதியர் குலத்தில்' என்ற மெட்டு |
|
1 |
| தமிழப் பிராமணரைத் தமிழரே கெடுக்கின்றார் | | தந்நலமாயிந் நாளுமே - இன்றேல் அவர் | | தாமாய்த் திருந்த ஏலுமே. |
|
2 |
| இருபதாம் நூற்றாண்டிலும் ஏமாற்றுத் தொழிலிலே | | ஈடுபடுத்தி யவர்மேல் - இழிவையே | | ஏற்றிவிடுமே இவர்கோள். |
|