|
3 |
| ஆரியத்தை யுயர்த்தி அரிய தமிழைத் தாழ்த்தும் | | பேராசிரியர் அடிமைத் - தனம்பிறர் | | பின்பற்றினாரே குடிமை. |
|
4 |
| கலப்பு மணத்தினிலும் குலத்தை யொழிப்பதிலும் | | நலத்துறை பிறிதிலுமே - பிராமணர் | | நாயகர் எனச் சொலுமே. |
|
5 |
| தன்மான மொன்றுமின்றித் தன்னையே தாழ்த்திநின்று | | தானாகத் தமிழன் கெட்டால் - பிராமணர் | | தாமோ பொறுப்பதற் குற்றார். |
|
6 |
| காலத்தோ டிடத்திற்கும் சாலத்தகுந்த மட்டும் | | கோலத்தைப் பூண எவரே - பிராமணர் | | போலத்தான் காணுபவரே. |
|
|
141. கொடை மடம் |
|
பண் - (காம்போதி) தாளம் - ஈரொற்று |
ப. |
| கொடைமடம் முற்றியின்று கூர்கெடும் தமிழ்நாடு | | கொடிமயிலும் பெற்றில்லை கோலத்தேர் போர்வையோடு |
|
து. ப. |
| படைமடமுற் றுத்தமிழ் பழுதுபட்ட பிற்பாடு | | பாவலர் பட்டபாடு பகரவே பற்றா தேடு (கொடை) |
|
1 |
| இலக்கண மறியாமல் எதுகைநடை வலித்தால் | | எங்கெங்கும் பொன்னாடைகள் ஏராளமாய்க் குவியும் | | மலக்கமில் தனித்தமிழ் மறைமலை யடிகளின் | | மாணுறு நூலுன் ஒன்றைக் காணவும்கண் அவியும். (கொடை) |
|