|
2 |
| தமிழை ஆரியமாகத் தாறுமாறாய்த் திரித்தல் | | தருவர் நாடாப்பதிவுப் பொறிபெற மாபதவி | | குமரி யிருந்தபடி கோணாமல் ஒலிப்பார்க்குக் | | கொடுத்த சிறுபணியும் எடுப்பர் செய்யார் உதவி. (கொடை) |
|
3 |
| விளக்கமின்றிக் கோவலன் வெறுங்கதை சொல்பவர்க்கே | | வெண்பொற்காசு பிரியும் ஐம்பதி னாயிரமும் | | சிலப்பதிகாரம் முற்றும் செவ்வையாய்க் கற்றவர்க்குச் | | சின்மொழிப் பாராட்டிற்கும் சேராது வாயுரமும் (கொடை) |
|
4 |
| ஆரியம் ஒழிகென்று வாயினால் சொல்பவர்க்கே | | அளிப்பது பல்வகையில் அடுக்கிய பல்லிலக்கம் | | சீரிய முறையந்தச் செந்தமிழ்ப் பகைமுற்றும் | | சிதைப்பவர் செயலையோ செவியுறவும் விலக்கம் (கொடை) |
|
5 |
| மொழிப்புலமையும் பற்றும் முழுக்கவும் இல்லாதார்க்கு | | முதன்மையே பலகலைக் களஞ்சியம் நெடுகலும் | | கொழுத்தசம்பளம் பெற்றுக் குறுந்தமிழ் தொகுத்தபின் | | கொடுப்பாரே பெரும்பண முடிப்புகள் முடிவிலும். (கொடை) |
|
6 |
| ஆயிரத்து முந்நூற்று முப்பதருங் குறளும் | | பாயிரத்தோடு கற்றுப்பல தெள்ளுரை கண்டாலும் | | கூயுற வினத்தோடு குலமத கட்சியென்னும் | | ஆயநாற் சார்பிலன்றி அளியாரேசீர் ஒன்றாலும் (கொடை) |
|
142. கட்சித் தலைவரைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுதல் |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
ப. |
| குறடென் பேதைகள் கொண்டதைவிடா | | கொண்ட தலைவனை என்றுங்கைவிடா. |
|