|
3 |
| சென்ற நூற்றாண்டே - ஆங்கிலர் | | சிறந்த கல்விமுறையைச் செய்துவிட்டனர் |
|
4 |
| இங்கே கல்லாதார் - தொகையே | | ஏறத்தாழ நூற்றிற்குத் தொண்ணூறு பேராகும் |
|
5 |
| இந்த நிலைமையே - தொடரின் | | இந்தியாவின் விடுதலை என்றுமே யில்லை |
|
6 |
| இலவசத் துவக்கக் கல்வி - இன்றே | | எங்குமே கட்டாயமாக இருத்திடுவீர் |
|
7 |
| இந்தி பொதுவென்னும் - கனவை | | இந்நொடியே விட்டுவிடுமின் அடியோடே |
|
8 |
| இந்தியா ஒருநாடன்று - அதனால் | | இன்றுபோல ஆங்கிலமே என்றுமிருக்க |
|
9 |
| இந்தியால் ஒற்றுமையாம் - என்றால் | | எண்ணெயினால் நெருப்பையே என்றுமணைப்பீர் |
|
10 |
| ஆங்கிலம் போல் இந்தியும் - எமக்கே | | ஆரியமாய் அயன்மொழியாகும் அறிவீர் |
|
11 |
| ஏனை நாட்டவர்போல் - இங்கே | | இந்தியரும் குலப்பிரிவின்றி யிருக்க |
|