பக்கம் எண் :

134இசைத்தமிழ்க் கலம்பகம்

12
இதற்கும் கல்வியொன்றே - கருவி
எந்த நலத்திற்குமிதே இன்னடிப்படை
13
ஒற்றுமை உண்மையாக - விரும்பின்
ஊக்கமாய் இம்மூன்றினையும் நீக்கிவிடுமின்
14
நடுநிலையாய்ச் சொன்னேன் - இதையே
நன்றெனக் கொள்ளாவிடின்நாம் துண்டுபடுவோம்.
157. இந்திய ஒருமைப்பாடு
'கலிலோ' என்ற மெட்டு
ப.
ஒருமை யிந்திய முறவேண்டுமெனின் ஒருவழியது கேளும் உடன்கை யாளும்.
(ஒருமை)
து. ப.
எரிமெய்யாய் அணைந்திட விரும்பின் இடுவதோ நெய்மேலும் இனியெந் நாளும்.
(ஒருமை)
2
நிலையாக இந்தியப் பொதுமொழி நிலவுக ஆங்கிலமே
கலையாம் அறிவியல் இலா இந்தியின் கட்டாயம் ஒழிக
தலையாக மொழியியல் துறையில் தமிழகம் தனி யுரிமை பெறவுறுமே.
(ஒருமை)