பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்135

158. பேராயத் தலைவர் தமிழ்நாட்டுப் படிநிகராளியர் (பிரதிநிதிகள்) ஆகாமை
பண் - (காம்போதி)
தாளம் - முன்னே
ப.
ஆராயின் தமிழ்நாட்டிற் பேராயத் தலைவரே
    ஆவாரோ படிநிகராளியர் எத்துணையும்.
து. ப.
ஓரேடும் இலக்கியம் பாரா திருப்பதுடன்
    ஓவாத தமிழ்மீதும் உற்றாரோ பற்றினையும்.     (ஆரா)
உ.
சீரான பலகலை ஆராய் கழகத்தமிழ்ப்
    பேரா சிரியருமே தேராத வரலாறு
பேரேனும் எழுதாதார் பாராளுமன் றகராத்
     தேராயம் எங்ஙனம்ஓர் கூறேனும் தெரியாறு     (ஆரா)
159. இலவசக் கட்டாயத் துவக்கக்கல்வி
'அந்தரங்கமாக வந்த நீர்' என்ற மெட்டு
பண் - (அமிசதொனி)
தாளம் - ஈரொற்று
ப.
இந்தியாவின் முந்து தேவையும் என்னவென்றே தான் - நன்றாய் எண்ணியின்றே காண்.
அ. 1
எழுதப்படிக்கத் தெரியார் நூற்றிற்கே இருப்பர் எண்பது பேர்
இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி இயன்று வருதல் சீர் - அதற்(கு) ஏற்பாடு செய்தல் நேர்
(இந்தி)
2
கள்ளுண்ணாமையால் வருநலங்களே கைகண்ட வேனும்
கல்வியை முதற்கொண்டு வராமலே தள்ளி வைத்திடுதல் - வண்டி
தனைமா முன்னிடுதல்
(இந்தி)