பக்கம் எண் :

138இசைத்தமிழ்க் கலம்பகம்

உ. 1
வேறுபட்ட மொழியா ரெல்லாம்
        வேண்டு மட்டும் ஆங்கிலமாம்
பேறுபெற்று வாழ்க வெனப்
        பெருந்தனமாய்ப் பன்முறையும்
கூறுபட்ட சொற்களெல்லாங்
     கொண்டுறுதி கூறியபின்
ஈறுமட்டும் பதவி தாங்க
         எண்ணியிந்தி யார்மகிழ
(மாறி)
2
முழுமதியின் தன்னரசை
         மூதறிஞர் எனத்தொடங்கி
விழுமதியின் பின்முறையாய்
        வேறுபட்டுக் காருவாப்போல்
வழுமதியர் மொழிகேட்டு
        வன்மை நடுவின்மையுடன்
குழுமி நின்ற குடியுரிமை
        குலைத்துநெடுங் கொடுங்கோற்கே
(மாறி)
163. வடவர் நம் தலைவரல்லர்
'சமரசம் உலாவும் இடமே' என்ற மெட்டு
ப.
வடவரோடு நாமும் சமமே - எவ்
வகையிலுந்தான்.
உ. 1
முந்தியிங் காங்கிலர் வருவதன் முன்பும்
பிந்தியும் அவரே நீங்கிய பின்பும்
இந்தியார் நம்மை ஆள்வதோர் பண்பும்
இல்லையே சிறிதும் எவ்வகையி லுந்தான்
(வடவ)
2
இந்தியின் றாரியம் இன்றமிழ் வேறு
இரண்டும் ஒன்றாக இசையுமோ கூறு
இந்தியும் தமிழ்மேல் இறைகொளு மாறு
இல்லையே இயல்பும் எவ்வகையிலுந்தான்
(வடவ)