பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்139

3
கல்வியென் றாலும் காட்சியென் றாலும்
கலைகளென் றாலும் காவலென் றாலும்
பல்வகைப் பட்டம் பதவியென் றாலும்
பகர்வதென் றாலும் எவ்வகையி லுந்தான்
(வடவ)
164. பண்பாட்டுயர்வு
'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற மெட்டு
பண் - (சிந்துபைரவி)
தாளம் - முன்னை
ப.
பண்பாடே மேலான பேறு - அந்தப்
     பண்டைத் தமிழ்வாணன் கண்டுள்ள வாறு
து. ப.
உண்ப தெறும்புமே சோறு - அது
    ஒன்றே போதுமெனின் ஒவ்வாத கூறு
(பண்)
உ. 1
இந்தி மொழியாலிந் நாடு - முன்னே
    இருந்தபண் பாடுந்தான் எய்துமே கேடு
செந்தமிழ் போனபிற் பாடு - இது
    செஞ்சிக்கோட் டைபோலச் சீர்கெட்ட காடு.
(பண்)
2
உடலுக்கே வேண்டுவ கண்டு - அவை
    உண்டாக்கத் தூண்டுவார் ஒருவாறே யின்று
உடலிற் சிறந்துள்ளம் உண்டு - அதை
    ஓம்பியவன் தான்மேல் உயர்திணை யென்று
(பண்)
3
பன்னெடுங் காலங்க ளாக - மிகப்
    பாடுபட் டுக்கண்ட பண்பாடு போகத்
தன்னலத் தாரேமே லாக - நல்ல
    தமிழைக் கெடுப்பதோ தன்மானஞ் சாகப்
(பண்)