பக்கம் எண் :

140இசைத்தமிழ்க் கலம்பகம்

4
சீயென்று தள்ளிய நாயும் - உயிர்
    செல்லும்போ தும்நல்ல செம்மையே தோயும்
நேயம்வே ளாண்மையும் வாயும் - நடு
    நேர்மை யுடன்மானம் சீர்மையும் வேயும்
(பண்)
165. தமிழ்த்தாய் விலங்குச்சிறை
'மன்மத லீலையை வென்றார்' என்ற மெட்டு
ப.
இங்ஙனம் கொடுமை வேறெங்கே கண்டோம்
    இங்கே தமிழ்க் கென்னென்ன பாடுகள்.
(இங்)
து. ப.
சொந்த நன்மனை தமிழ்சூழ மக்கள் காண
     வந்தபுன் மொழிகளே வாழத்தளை பூண
(இங்)
உ.
இந்தியா வில்முனம் வாணிகஞ் செய்ய
    வந்த ஆங்கிலேயரால் - அவர்
இன்மொழி யாட்சியால் செங்கோலின் மாட்சியால்
    பின்னே நேர்மைக் கட்சியால்
அந்தமிழ் தூயதாய் ஆக்கிய மறைமலை
     அடிகள் தனித்தொண்டினால்
அறவுமே தளர்ந்தே ஆங்கிலர் நீங்கவும்
     அழுந்தும் கைகால் விலங்கே தமிழ்க்கே
(இங்)
166. தமிழ்த்தாய் அழுகை
பண் - (சாருகேசி)
தாளம் - முன்னை
ப.
கண்ணீர்விட்டுக் கதறி அழுதாள் - இரு
கன்னமும் வீங்கித் தமிழ் அன்னையே விம்மி விம்மி(க்)
(கண்)