|
உ. 1 |
| என்னருமை மைந்தரே என்பகையொடு கூடி | | என்பெயர் இயல்நாடும் இயம்பல் தடுத்தா ரென்றே. (கண்) |
|
2 |
| அறுப்பவனையே நம்பும் ஆடுகள்போல் என்மகார் | | ஆரியரொடு கூடி அழிவுறுகின்றா ரென்றே (கண்) |
|
3 |
| பாரில் முதல்மொழியாய்ப் பலகிளை பெற்ற என்றன் | | சீரிய வரலாற்றைச் சிதைக்கத் துணிந்தா ரென்றே (கண்) |
|
4 |
| என்னுயி ருள்ளவரை என்மகார் கண்திறக்கும் | | இந்நிலை கண்டென்னையும் எண்ணினார் கொல்லவென்றே (கண்) |
|
5 |
| முன்னே மதுரையிலும் பின்னேமா சென்னையிலும் | | அண்ணா மலைநகரும் என்னைத் தள்ளினார் என்றே. (கண்) |
|
167. தமிழ்த்தாய் புலம்பல் |
|
(இசைந்த துயரச்சுவை மெட்டிற் பாடுக) |
ப. |
| ஏழை யாயினேன் - மிக | | ஏழை யாயினேன். |
|
து. ப. |
| கீழை மொழியுள்ளும் - மிகக் | | கீழை மேயினேன் (ஏழை) |
|
உ. 1 |
| பேழைக் கணக்கிலே - பொருள் | | பேணி வைத்தஎன் | | மாழை மக்களும் - எனை | | மறுகில் விட்டனர் (ஏழை) |
|