பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்143

2
பஞ்சையராய் என்மக்கள் - முற்றும்
பண்டை நூலை யிழந்தார்
எஞ்சியுள்ள நிலையும் - இனி
இந்தியாற் போம்அழிந்தே.
3
தஞ்சமே யாருமில்லை - இன்று
தன்னவரும் பகையே
அஞ்சும் ஒடுங்கியினி - என்றும்
அடிமையாகும் வகையே.
169. தமிழன் உடமை தமிழ் ஒன்றே
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற மெட்டு
1
இருப்ப தெல்லாம் தமிழனுக்கே
இன்பத் தமிழொன்றே
இனியதையும் இழந்துவிட்டால்
இங்கே வாழ்வில்லை
பொருத்தமுறும் தாய்க்கொலையும்
புரிக என்றுரைத்தால்
பொதுமதியால் அவ்வுரையின்
புன்மை அறிந்திடுவீர்.
(இருப்ப)
2
தன்வீட்டுள்ள நெருப்பும் - மிகத்
      தப்பாமற் சுடும்தொடினே
தன்னாட் டுளதே யென்றோர் கட்சி
      தழுவின் தீயது தீங்காகும்
பின்னாட்கே அதுதெரிந்தால்
      பிரிந்தே விடவேண்டும்
தன்கேட்டைத் தான்தேடின்
      தடுப்பார் யாருமில்லை.
(இருப்ப)