|
3 |
| ஆரியந் தமிழே நீடிய காலம் | | தீராப் போராட்டம் (இந்து) |
|
4 |
| தீந்தமி ழொலியை வடவல் லெழுத்தால் | | தெரிவிப் பியன்றிடுமோ (இந்து) |
|
5 |
| தேயம் முழுவதும் நேயமுறவொரு | | சாயம் பூசுவதோ (இந்து) |
|
6 |
| குளிக்கப் போனார் சேற்றைப்பூசிக் | | கொள்ளல் முறையாமோ (இந்து) |
|
7 |
| ஒற்றுமை மிகவே பெற்றிட முயல்வதும் | | உற்றதை யிழந்திடவோ. (இந்து) |
|
180. இந்தியெதிர்ப் பில்லையென ஏமாறல் |
|
ப. |
| இந்தியை எதிர்ப்பவர் இந்நாட்டில் இல்லையா - அதை | | எங்கும் எதிர்த்தே நடக்கும் கூட்டம் இல்லையா - அதைக் கேட்டதில்லையா. |
|
உ. 1 |
| முந்தியேநல் மறைமலையார் முனைந்தெதிர்த் தாரே - அந்த | | முனையைச் சோமசுந்தர பாரதியடுத் தாரே - மிக | | முதன்மையான பெருமக்களும் துணைகொடுத் தாரே - அந்த வினைமிகுத் தாரே. (இந்தி.) |
|
2 |
| தமிழரத்தம் ஓடுகின்ற புலவரெல் லாரும் - அந்தத் | | தகுதியில்லா இந்தியையே புகுதவொல் லாரே - பெரு | | தடையிருப்ப தாலேவாயைத் திறந்துசொல் லாரே - இதை அறிந்துகொள் வீரே (இந்தி) |
|