|
3 |
| இந்தியை எதிர்ப்பதெல்லாம் எதிர்க்கட்சி என்பார் - இனி | | எத்தனைநாள் இங்ஙனம் ஏமாற்றுவர் பின்பார் - மிக | | எதிர்த்துவரும் பொதுத்தேர்தலில் என்னசெய்குவார் - அடி மண்ணைக் கௌவுவார். (இந்தி) |
|
181. அரசியற் கட்சியார் கல்வித்துறையில் தலையிடல் |
|
'சீரகுவர சுகுணாலய' என்ற மெட்டு |
பண் - (பைரவி) தாளம் - முன்னை |
ப. |
| ஆசிரியருக் கறிவில்லையா | | அரசியலார் கலைத்துறை தலையிட (ஆசிரி) |
|
து. ப. |
| அடாததென்று விடாது சொல்லியும் | | வடாதுமொழி யிந்தியே வலுக்கட்டாயம் (ஆசிரி) |
|
உ. 1 |
| ஆள்வினைப் பாலே அதிகாரத் தாலே | | கேள்வியிலை யென்றுசெய் கேடிரு பாலே. (ஆசிரி) |
|
2 |
| இருமொழிக் கொள்கை ஏற்குமிவ் வெல்கை | | இந்தியைப் புகுத்தவே மும்மொழிக் கொள்கை (ஆசிரி) |
|
3 |
| ஆங்கிலம் நீங்கின் அறிவுபின் வாங்கும் | | ஓங்கும் ஒற்றுமையற உரிமை ஏங்கும் (ஆசிரி) |
|