|
2 |
| ஆங்கிலம் அயன்மொழியானால் வடக்கே | | ஈங்கயல் நமக்கிந்தியும் (தமிழா) (இந்தி) |
|
3 |
| தமிழெனும் மொழியும் தமிழனென்பேரும் | | அமிழ்ந் தடியொடு தீரும் (தமிழா) (இந்தி) |
|
4 |
| வள்ளுவன் வழியும் மறைமலை மொழியும் | | தெள்ளுக தீங்கொழியும் (தமிழா) (இந்தி) |
|
5 |
| இயற்பெய ரெல்லாம் இழக்கும் ஈறும் | | மயற்பட வடிவுமாறும் (தமிழா) (இந்தி) |
|
185. இந்தியால் ஒற்றுமை யில்லை |
|
'திவ்ய தரிசனந் தரலாகாதா?' என்ற மெட்டு |
ப. |
| இந்தி மொழியினால் வருமெனல் மடமே | | இந்திய ஒற்றுமை (இந்தி) |
|
உ.1 |
| முந்தியே குழுவினில் முரண்படு சமமே | | முடிபொரு தலைவன் தப்பிதமே | | பிந்திய எதிர்ப்பும் பேணார் சிறிதுமே | | பிடிவிடா திருப்பது மதமே (இந்தி) |
|