|
3 |
| கல்வி வாயில்இரு மொழியும் - ஆகும் | | கற்பிக்கவே நல்ல வழியும் | | தெள்ளுந் தமிழ்வளம் பொழியும் - இங்குத் | | தேங்கு மடமையும் ஒழியும். |
|
4 |
| செந்தமிழே தமிழ் தேரும் - அதிற் | | செய்த கலைநூலைச் சேரும் | | ஏந்து மொழியிலும் பேரும் - சொல்லும் | | எந்தமி ழாகாது பாரும். |
|
5 |
| மந்திரி மார்தமி ழறியார் - அதன் | | வரலாற்றி லும்மிக வறியார் | | இந்தியைப் புகுத்தும் நெறியார் - அவர் | | என்றும் பதவிகொள் குறியார். |
|
|
193. பயனில் மொழி கற்கக் காலமின்மை |
|
"அன்னையும் தந்தையும் தானே" என்ற மெட்டு |
ப. |
| நாம்இந்தி கற்கநாள் ஏது - பல | | நல்லறி வியற்கேநாள் இல்லாத போது (நாம்) |
|
து. ப. |
| காமுறு கல்வியிப் போது - பல | | கரையறு கடல்களாய்ப் பரவும் ஓயாது | | ஏமுற நாம் நிலமீது - இன்று | | இருக்கும் நாள் வரவரச் சுருக்கமென்றோது (நாம்) |
|
2 |
| தீந்தமிழ் ஆங்கிலம் தானே - இங்குத் | | திறமுறக் கற்றிடின் பிறமொழி ஏனே | | மாந்தரின் மொழித்திறம் இன்றே - நன்று | | மருவும் சராசரி இருமொழி யென்றே |
|