பக்கம் எண் :

166இசைத்தமிழ்க் கலம்பகம்

197. இந்தியொழிப்பு
'வந்தேமாதரம் என்னுங்க' என்ற மெட்டு
ப.
இன்னே இந்தியொழி யுங்கள் - இனிமேல் இங்கே
இன்றமிழே வாழவை யுங்கள்.
து. ப.
முன்னே மறைமலைகள் முனைந்து தடுத்தும் இந்தி
வெந்நோய் எனவே நாட்டில் விரைந்து பரவும் முந்தி
(இன்னே)
உ.
என்னேனும் தீங்கு வரினே - முன்னமேயதை
ஏற்றவகை தீர்த்திட வேண்டும்.
பின்னே தடுப்பம் எனினே - நம் வாழ்விழந்து
பேருமற்றுப் போக நேருமே
சின்னாளின் பின்னிந்தியைச் சிறிதும் எதிர்ப்பவர்க்கும்
எந்நாளும் கடுஞ்சிறை இயலும் கொலைத் தண்டமும்
(இன்னே)
198. கம்ப துளசிதாசர் ஏற்றத்தாழ்வு
'மீவல்ல குணதோஷ மேமி' என்ற மெட்டு வகை
பண் - (காப்பி)
தாளம் - மூவொற்று
ப.
துளசி தாசுங் கம்பனாமோ -துறைபோமோ
து. ப.
விளை சீரில்லா இந்தி விழுமுந் தமிழாமோ
(துளசி)
உ. 1
வண்ணந்தொண் ணூற்றாறு வளரும்வண் ணனைவேறு
விண்ணுங்கொள் ளுமாறு விளங்குங்கம் பன்வீறு
(துளசி)