பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்167

2
பத்தாயிரம் மேலும் பற்றாருந் தாம்மேவும்
மெத்த வான்மீகியை மெத்துங் கம்பன்பாவும்
(துளசி)
3
சுடரோன் வெங்கதிராலே சொலிக்குந் தண்மதிபோலத்
தொடர்புங் கம்பன் பாங்கே துளசிதாசன் போங்கும்
(துளசி)
4
இராமகதை மூலம் இந்திபுகுத் தெண்ணம்
இராமல் எந்தக்காலும் இருக்க நல்லவண்ணம்.
(துளசி)
199. தமிழ்கெடவரும் வளர்ச்சித்திட்டம் பயனற்றது
'தோடுடைய செவியன்' என்ற மெட்டு
பண் - நாட்டை
தாளம் - முன்னை
1
வாளைதவழ் வெள்ளங்களி வந்தயல் துள்ளி யிளந்தெங்கின்
பாளைமிசை வாளின்மிளிர் பண்ணை நீர்ப் பாசனங் கண்டாலும்
காளையிவர் கண்ணுதல்முக் காலைதேர் கழகத் தமிழ்நைய
நாளைவட இந்தியொடு நாகரி நலியின் ஒருநன்றோ.
2
இரும்பும் இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்பு நிலக்கரியும்
பரும்பெனக் குவிந்து தொழிற்சாலைகள் பலவும் எழுந்தாலும்
விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்த தமிழ்நைய
உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறு செயின்நன்றோ.
3
கீழ்கரை நின்றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை
மேல்கரை நேர்சேர விணையாகிப்பின் மின்னோட்டம் வந்தாலும்
சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய
மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின் ஒருநன்றோ