|
4 |
| பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டி தொட்டியெல்லாம் | | நள்ளியெதுங் கட்டணமேயின்றி நல்கூர்ந்தாருங் கற்றாலும் | | வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்த தமிழ்நைய | | கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவி வரின்நன்றோ. |
|
5 |
| முதியோரெலாம் இளமைவர மூப்புச் சம்பளமும் பெற்று வாழ்ந்து | | பதியாமலே இளைஞரெலாம் பாங்கான பதவிகள் பெற்றாலும் | | மதிசூடி முன்மதுரை யமர்மன்றஞ் சேர்ந்தாய்ந்த தமிழ்நைய | | புதிதாய்வரும் இந்தியோடு நாகரி புகுமேல் ஒருநன்றோ. |
|
6 |
| நண்ணும் நடுப்பகல் மாணவர் நாட்டுள்ள பள்ளி களிலெல்லாம் | | உண்ணும்படி அறுசுவைசேர் உண்டிகள் உதவியே வந்தாலும் | | பெண்ணையிடங் கொண்டான்முனம் பேணியே ஆய்ந்த தமிழ்நைய | | எண்ணிவரும் இந்தியொடு நாகரி இன்னல் செயின்நன்றோ. |
|
7 |
| புத்தாடை பல புத்தகங்கள் பூத்துகிற் பொக்கணத்தி லிட்டுத் | | தத்தளிக்கும் மாணவரெல் லாருக்கும் தந்தையிற் றந்தாலும் | | பித்தன்எனும் பெம்மான்முனம் பீடுற ஆய்ந்த தமிழ்நைய | | எத்திவரும் இந்தியொடு நாகரி எய்தின் ஒருநன்றோ. |
|
8 |
| ஊர்தோறும் பல் உணவுப்பொருள் உண்மையில் ஏழைகளே வாங்கும் | | நேர்மைவிலைக் கடைகள்பல அண்மையில் நிலையா யிருந்தாலும் | | நீர்மேவிய சடையன்முனம் நீடியே ஆழ்ந்த தமிழ்நைய | | நீர்மையிலா இந்தியொடு நாகரி நெருங்கி வரின்நன்றோ. |
|