|
9 |
| கற்றோருடன் மற்றோரெலாங் கண்ணிய பணியாற் பெரு வருவாய் | | வற்றாநல வாழ்விற்பெறும் இன்பமே வழி வழியுற்றாலும் | | பொற்றாமரைக் குளமேற் சிவப் புங்கவன் ஆய்ந்த தமிழ்நைய | | முற்றாவியல் இந்தியொடு நாகரி முடுகி வரின்நன்றோ. |
|
10 |
| பலகலைதேர் கழகமெனப் பைந்தமிழ் நாட்டிலுள வெல்லாம் | | மலைபோற் குவிநல்கை மகிழ்கூரவே மதிதோறு முற்றாலும் | | கலகலென வொலிக்குங் கழற் கண்ணுளன் ஆய்ந்த தமிழ் நையக் | | கலகம்விளை இந்தியொடு நாகரி கறுவி வரின்நன்றோ. |
|
|
200. இந்தியார் ஏய்ப்பு |
|
'தேரத்திலே தில்கு சத்தா' என்ற மெட்டு |
1 |
| இந்தியார்க்கும் சீனருக்கும் என்ன வேற்றுமை | | இந்தியாரும் தம்மொழியால் எம்மைத் தாக்கினார். |
|
2 |
| விருப்பமின்றி இந்தியையாம் புகுத்தோம் என்றனர் | | பொருத்தமின்றி மேன்மேல்அதைப் புகுத்தி நின்றனர் (இந்தி) |
|
3 |
| எள்ளளவும் தகுதியில்லா இந்தி மொழியை | | எள்ளிநகை யாடச்செய்தார் இந்த வழியே (இந்தி) |
|
4 |
| நட்பெனவே நடித்துக் கொண்டு நாணமில்லாமல் | | உட்பகையைப் பிடித்தெமக்கே ஊறு செய்கின்றார் (இந்தி) |
|