பக்கம் எண் :

170இசைத்தமிழ்க் கலம்பகம்

5
மாட்சிமிகும் ஆங்கி லத்தை மாற்றுவதினால்
ஆட்சி செயத் தகுதியின்மை காட்டுகின்றனர்
(இந்தி)
6
ஆங்கிலரே நீங்கினபின் அவரிடத்திலே
ஆளுகின்ற மாந்தரென அமரவுற்றாரே
(இந்தி)
7
ஏமாளிகள் தமிழரென எண்ணி விட்டாரே
இறுதியிலே கவுரவர்தாம் எனவே கெட்டாரே
(இந்தி)
201. இந்தியாசிரியருக்கு அறிவுரை
'காமசுந்தராங்கி உனது' என்ற மெட்டு
பண் - (தன்னியாசி)
தாளம் - ஈரொற்று
ப.
இந்தியா சிரியருக் கொன்று
இயம்புவேன் அன்பாக இன்று
து. ப.
முந்தி அவரே அறிவர் நன்று
மூலத்தமிழ் இந்தியை யொர் காலத்திலுங் கொள்ளாதென
(இந்தி)
இன்றிருந்து நற்றமிழைக் கற்க
     எதிர்காலத்தில் தமிழைக் கற்பிக்க
அன்றி வட நாடனைந்து நிற்க
அருமைத் தமிழறிவங்குள பெருமக்களின் உளம் நன்குற
(இந்தி)